ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு |

இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களும், ராம்சரணின் ரசிகர்களும் ஆந்திரா, தெலுங்கானாவில் போட்டி போட்டு கொண்டு தங்களது அபிமான ஹீரோக்களுக்கு போஸ்டர்கள் மற்றும் கட்-அவுட்களை அமைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஆந்திராவில் உள்ள சுதர்சன் 70MM தியேட்டர் நிர்வாகம் இயக்குனர் ராஜமவுலிக்காக தங்களது தியேட்டர் முன்பு மிகப்பெரிய கட்-அவுட் ஒன்றை உருவாக்கி உள்ளது. இயக்குனர் ராஜமவுலியை பொறுத்தவரை பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் உள்ள இயக்குனர்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார். அவரது படம் வெளியாகும் போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் அதைப்பற்றிய எதிர்பார்ப்பு எழும் விதமாக ஆந்திராவுக்கு பெருமை சேர்த்து உள்ளதால் அவருக்கென கட் - அவுட் வைத்துள்ளதாக தியேட்டர் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு இயக்குனருக்கு ஹீரோவுக்கு இணையாக கட் - அவுட் வைக்கப்படுவது இதுதான் முதன் முறையாக இருக்கும்




