4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் | சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் | சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா |

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் சல்யூட். அவர் முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருந்தார். இந்த படம் ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், இந்த மாதம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தியேட்டர்களுக்கு பதிலாக கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது. துல்கர் சல்மான் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
அவரது இந்த முடிவு தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இனி நாங்கள் துல்கர் படத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என போர்க்கொடி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு பிரச்சினையை கிளப்பிவிட்டு உள்ளது. இது குறித்து வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தீர்மானம் பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, "சல்யூட் படத்தை நாங்கள் எடுத்தபோது கொரோனா தாக்கம் துவங்கி இருந்தது. அதனால் இந்த படம் தியேட்டர்களில் வெளியாக வாய்ப்பு உள்ளதா என்கிற சந்தேகத்துடன் தான் இந்த படத்தை நாங்கள் எடுத்தோம். சொல்லப்போனால் ஓடிடியில் வெளியிடுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய குரூப் திரைப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிட்டோம். அந்த படத்தின் மூலம் அவர்கள் மிகப்பெரிய லாபமும் அடைந்தார்கள். அந்த லாபத்தில் நாங்கள் ஏதாவது பங்கு கேட்டோமா? இல்லை அவர்கள் தான் கொடுத்தார்களா? ஆனால் இப்போது சல்யூட் படத்தை ஏன் ஓடிடியில் வெளியிட்டீர்கள் என்று போர்க்கொடி தூக்கினால் அதை முறைப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.




