ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
டாக்டர், சில்லுக்கருப்பட்டி, அமலபால் நடித்த ஆடை உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் விஜய் கார்த்திக் கண்ணன். சில்லுக்கருப்பட்டி படத்தில் பணியாற்றியபோது தன்னுடன் உதவியாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் யாமினி யஞ்னமூர்த்திக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு ஒளிப்பதிவாளராக மாறிய யாமினி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவரின் திறமையை பார்த்து, செல்வராகவன் தனுஷை வைத்து தான் இயக்கி வந்த நானே வருவேன் படத்திற்கு இவரை ஒளிப்பதிவாளராக நியமித்தார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், தன்னால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை என விலகினார் யாமினி யஞ்னமூர்த்தி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் விஜய் கார்த்திக் கண்ணனுக்கும், யாமினிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இருவரின் நட்பு வட்டாரங்களும், திரையுலகை சேர்ந்தவர்களும், மற்றும் ரசிகர்களும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.