தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நாசர், விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்பிற்கு வந்த பின்னர் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது பேசிய விஷால் 'கட்டிடப் பணிகள் விரைவில் முடியும், அங்கு அமையும் பிரமாண்ட அரங்கத்தில்தான் எனது திருமணம் நடக்கும், அதுவரை எனது திருமணம் நடக்காது' என்றார்.
சொன்னபடி இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் இடையில் ஐதரபாத்தை சேர்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த திருமணம் நின்று போனது. உங்கள் சவால் எங்கே போனது என்று அப்போது விஷாலை ட்ரோல் செய்தார்கள்.
இப்போது மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி உள்ளார். நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும். கட்டிடப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நடிகர் சங்கம் கட்டப்பட்டதற்கு பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். அதில் உறுதியாக இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக கட்டப்பட்ட கட்டிடம். எனவே அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தரவேண்டும் வாசலில் இருந்து வரவேற்கும் முதல் ஆளாக நான் காத்திருப்பேன்' என்றார்.