நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கமல்ஹாசன் 5 வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். அவரே கோவை தொகுதியில் தோற்றார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தார்.
இதன் காரணமாக தற்போது அரசியலை சற்று குறைத்துக் கொண்டு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதன் முதல் கட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது விக்ரம் படத்தில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்ததைய பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை வருகிற 14ம் தேதி காலை 7 மணிக்கு கமல் அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கமல். அதற்கு ஷங்கர் ஒத்துழைப்பு தர வேண்டும். இது தவிர அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்கும் படங்கள் உள்ளன. இதனால் சினிமாவில் இனி அவரை நிறைவாக காணலாம்.