ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை |
ஐக்கிய அரபு அமீரக அரசு தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறமையான மாணவர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களுக்கும் வழங்கி வருகிறது.
இந்த விசா பெறுவதன் மூலம் ஐக்கிய அமீரகத்தின் கவுரவ குடிமக்களாக வாழலாம். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ் பெற்றுள்ளனர். தமிழில் பார்த்திபன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக விஜய் சேதுபதி 2 வருடங்கள் துபாயில் வேலை பார்த்தார். வேலை பார்த்த நாட்டின் கோல்டன் விசா விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.