சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் நடித்திருந்தார்கள். ஆனால் படத்தில் வாணி போஜன் நடித்த காட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுகுறித்து வாணிபோஜன் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது: கதைப்படி சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணி போஜனுடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது. அவருடன் வாழ்கிறார் என்பது மாதிரியாக கதை எழுதப்பட்டது. இதற்காக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். சில காட்சிகள் நடித்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்ட பல காட்சிகள் படமாக்க முடியவில்லை. குறிப்பாக வாணி போஜன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படாததால் முழுமை பெறாமல் இருந்தது. அதனால் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டன. இதுப்பற்றி அவரிடம் எடுத்து சொன்னோம். அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு நன்றி'' என்றார்.