வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் நினைவெல்லாம் நீயடா. இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர். பியார் பிரேமா காதல், கழுகு 2, காமன் மேன், இடியட் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது: மண்ணுக்குள் போகும் வரை மனசுக்குள் நிறைந்திருக்கும் முதல் காதல். அதுவும் பள்ளி நாட்களில் பக்குவம் இல்லாத வயதில் பொசுக்கென்று பூத்துவிடும் அந்தக் காதல் வயசானாலும் வாடிப்போகாமல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட காதலை கொண்டாடும் இளமை துள்ளும் படமாக உருவாகி வருகிறது நினைவெல்லாம் நீயடா.
படம் பார்ப்பவர்கள் எல்லோரையும் மீண்டும் பள்ளிக்கூடம் போக மாட்டோமா என்று ஏங்க வைக்கும். இளையராஜாவின் ஐந்து பாடல்களும் மனதை மயக்கும் ரகம். பிரஜன், மனிஷா, சினாமிகா மட்டுமல்லாமல் இளம் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவா ஜோடிக்கும் இந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கித் தரும். இந்த படத்தை மே மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். என்றார்.