செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் நாகசைதன்யா, சமந்தா பிரிவும் ஒன்றாக இருந்தது. தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நாகசைதன்யாவின் குடும்பப் பெயரான 'அக்கினேனி' என்பதை சமந்தா நீக்கியது அவர்களது பிரிவு சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது.
அதன்பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா, நாகசைதன்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது பிரிவை ஒரே மாதிரியான அறிக்கையாக வெளியிட்டனர்.
தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அந்த அறிக்கைப் பதிவை சமந்தா தற்போது நீக்கியுள்ளார். நாகசைதன்யாவின் சமூக வலைத்தளங்களில் அந்தப் பதிவு அப்படியே இருக்க சமந்தா மட்டும் நீக்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது பிரிவு பற்றிய அறிவிப்புக்குப் பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார் சமந்தா. தற்போது பிரிவு பற்றிய அறிவிப்பையும் நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.