அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்து கடந்தாண்டு வெளியான படம் ‛ஜெய்பீம்'. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்றதில் 'ஷாஷங் ரிடெம்ப்ஷன்' திரைப்படத்தை முந்தி 'ஜெய்பீம்' சாதனை படைத்தது. அதேபோல், ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் 'ஜெய் பீம்' இடம்பெற்றது.
சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யு-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் 'ஜெய் பீம்' திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் 'ஜெய் பீம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இடம்பெற்றிருந்தது.