சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்தர் ரகுல் ப்ரீத்தி சிங் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம். காரணம் அடுத்தடுத்து அவர் நடித்துள்ள 7 படங்கள் வரிசையாக வெளிவர இருக்கிறது. இதில் 6 பாலிவுட் படங்கள்.
ஆயுஷ்மானுடன் 'டாக்டர் ஜி', அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுடன் 'ரன்வே 34', அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'தேங்க் காட்', இது தவிர 'சத்ரிவாலி', 'அட்டாக்' மற்றும் அக்ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் என பாலிவுட் படங்கள் வரிசை கட்டுகின்றன. இது தவிர சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் அயலான் இந்த ஆண்டு வெளிவருகிறது.
இந்தியன் 2வில் நடித்தாலும் அந்த படம் இந்த ஆண்டு வெளிவருவதற்கான சாத்தியகூறுகள் இல்லை. அப்படி வெளிவந்தால் இந்த ஆண்டு ரகுல் ப்ரீத்தி சிங் நடித்த 8 படங்கள் வெளிவரும்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 2022 எனது சிறந்த வருடங்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 7 படங்கள் இந்தியில் 6 படங்கள் ரிலீஸுக்கு வரிசையாக இருப்பதால் 2022 ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படங்கள் வெளிவரத் தொடங்கியதும், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமாக இருப்பதையும், ஒவ்வொரு படமும் வெவ்வேறு வகைகளாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். என்கிறார்.




