மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி |

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதுப்பற்றி இளையராஜா உடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் பயணித்து வரும் அவரின் நலம் விரும்பியான ஶ்ரீராமிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛ராஜா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அவர் அங்கு செல்வது வழக்கம். இன்று இரவு சாமி கும்பிட்டு விட்டு நாளை(ஜன., 1) காலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார். மதியம் 2மணிக்கு சென்னை வருகிறார். இதுவே அவரது பயண திட்டம். அவரது உடல்நிலை பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ராஜா சார் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள'' என்றார்.




