மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண்ட்ரியா குத்துப் பாடல் ஒன்றுக்கு குரல் கொடுத்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா' திரைப்படம் உருவாகி வருகிறது. ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடுகிறார் என்ற செய்தி வெளியானபோது சமந்தா கவர்ச்சி ஆட்டம் ஆட போகிறார் என தகவல் பரவியது. அதை மெய்பிக்கும் வகையில் பாடலின் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தினார்கள்.
இப்போது புஷ்பா படத்திலிருந்து சமந்தா ஆடிய பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் தமிழ் பதிப்பிற்கு தான் ஆண்ட்ரியா பாடி உள்ளார். ‛‛ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா...'' என்ற பாடலை விவேகா எழுதியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கு நடிகை சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு செம கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். அதுதொடர்பான போட்டோக்கள் பாடலின் லிரிக் வீடியோவிலேயே வருகிறது. நேற்று முதல் சமந்தாவின் பாடல்கள் தான் சமூகவலைதளங்களில் அதிகம் டிரெண்ட் ஆனது.
கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு சமந்தா ஆடி உள்ள இந்த கவர்ச்சி ஆட்டத்தை பற்றி தான் சமூகவலைதளங்களில் ஒரே பேச்சாக இருக்கிறது.