பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர் தனய்யா, நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், தலையில் மல்லிகைப் பூ அணிந்து ஒரு மாடர்ன் தமிழ்ப் பெண் போல வந்தார் ஆலியா பட். “எல்லோருக்கும் வணக்கம்' என தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன்பு வந்த '2 ஸ்டேட்ஸ்' படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்தேன். சென்னை வருவது மகிழ்ச்சிதான். “ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தது உற்சாகமான ஒரு விஷயம். அதன்பின் என் மீது நிறைய பேர் அன்பு செலுத்தினார்கள். கனவு நனவாது போல் இருந்தது, டிரைலரைப் பார்த்த போது, என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

நிகழ்ச்சியில் ஆலியா பட் வந்து கலந்து கொண்டது பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சென்னையில் 'ஆர்ஆர்ஆர்' மலையாள டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஆலியா கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வரவில்லை என நினைத்தார்கள். மாறாக 'ஆர்ஆர்ஆர்' தமிழ் பட பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.