'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயத மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதேஜ் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நான்கு மாதங்கள் 25 நாட்கள் சிகிச்சையில் இருந்துள்ளார் ஸ்ரீதேஜ். பதினைந்து நாட்களுக்கு முன்னதாக சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் 15 நாட்கள் அந்த சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிற்குப் போகலாம் என சொல்லி இருக்கிறார்களாம்.
இருப்பினும் டியூப் வழியாகத்தான் உணவு கொடுக்க முடிவதாகவும், கண்களைத் திறந்து பார்க்க முடிகிறதென்றும், அவரது மூளை செயல்பாடு இன்னும் முழுமையாக இல்லை, தங்களை இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் சிறுவனின் தந்தை பாஸ்கர் தெரிவித்துள்ளார். தனது மகள் இன்னும் அம்மா எங்கே சென்றுள்ளார் என்று கேட்டு வருவதாகவும், அதற்கு அம்மா கிராமத்திற்குச் சென்றுள்ளார் வருவார் என தாங்கள் பதிலளிப்பதாகவும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
தனது மகனின் சிகிச்சைக்காக உதவிய புஷ்பா 2 குழுவினர், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாஸ்கர் நன்றி கூறியுள்ளார்.
தியேட்டர் நெரிசல் காரணமாக பெண் இறந்த பின் அந்த தியேட்டர் நிர்வாகத்தில் சிலரைக் கைது செய்திருந்தனர். அந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்குச் சென்றதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என அவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தால் உயிரிழப்பையும், சிறுவனின் இந்த நிலையையும் தவிர்த்திருக்கலாம்.