திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத் சந்தியா தியேட்டரில் நடந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி கடும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதேஜ் குணமடைந்து வருவதால் அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சில நாட்கள் தங்கியிருக்க மருத்துவர்கள் கூறியிருந்தனர். அங்கு மாற்றப்பட்ட சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
“ஸ்ரீதேஜ் குணமடைய எங்களது மொத்த குடும்பமும் காத்திருக்கிறது. நாளுக்கு நாள் ஸ்ரீதேஜ் குணமடைந்து வருவதைப் பார்க்கும் போது நிறைவாக உள்ளது,” என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேஜின் சிகிச்சைக்காக அல்லு அர்ஜுன் தரப்பும், புஷ்பா 2 தயாரிப்பாளர் தரப்பும் 2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்கள்.
மருத்துவமனையிலிருந்து வந்தாலும் மற்றவர்களை நினைவு கூறும் அளவிற்கு ஸ்ரீதேஜ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது மருத்துவமனை டாக்டர்கள் தகவல்.