கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். நடிப்பு தாண்டி பைக், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சமீபகாலமாக கார் ரேஸில் உலகளவில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். இவரின் கலைச் சேவை மற்றும் ரேஸ் திறமையை பாராட்டி மத்திய அரசு ஜனவரி மாதம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. டில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த பத்ம விருது விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருது பெற்றார். இதில் அவரது மனைவி ஷாலினி, மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.

அனைவருக்கும் நன்றி
விருது பெற்ற பின் சென்னை திரும்பிய அஜித்திற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜித், ''அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். விரைவில் நேரில் சந்தித்து பேசுவோம்'' என்றார்.

மிடில் கிளாஸ் வாழ்க்கை
முன்னதாக டில்லியில் அஜித் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது : ''பத்ம பூஷன் விருது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மனதளவில் இன்னும் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்வதாக தான் உணர்கிறேன். அதனால் இந்த விருதை பெறுவது சாதாரணமான ஒரு உணர்வையே தருகிறது. விருது அறிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதுமாதிரியான விருதுகள் வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உணர வைக்கிறது.
எனக்கு பட்டங்கள் மீது நம்பிக்கையில்லை. அஜித் அல்லது ஏகே என்று அழைப்பதே பிடித்திருக்கிறது. நான் ஒரு நடிகன், மற்ற வேலை போன்று இதுவும் ஒரு பணி தான். அதற்கான சம்பளத்தை பெறுகிறேன். எனக்கு என் வேலை பிடித்திருக்கிறது. முடிந்தவரை எளிமையான வாழ்க்கையை வாழ முயல்கிறேன். அதிகமாக யோசிப்பதை தவிர்க்கிறேன்.

என் சாதனைக்கு உரியவர் ஷாலினி
என் வாழ்வில் ஷாலினியின் பங்களிப்பு முக்கியமானது. வெற்றி, தோல்வி, பாராட்டு என நான் சந்திக்கும் எல்லாவற்றுக்கும் உரியவர் அவர் தான். என் முடிவுகள் சரியோ, தவறோ ஒருபோது என்னை அவர் விட்டுக் கொடுத்தது இல்லை. என்னை ஊக்குவிக்கவும் ஒருநாளும் அவர் தவறியது கிடையாது. என் சாதனைகளில் முழு பாராட்டுகளும் அவருக்குத் தான் சென்று சேர வேண்டும்.
இவ்வாறு அஜித் கூறினார்.