பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

கன்னடத்தில் கலந்த ஜூலை மாதம் சிறிய பட்ஜெட் படமாக வெளியான படம் 'சூ ப்ரம் சோ'. இயக்குனரும் நடிகருமான ராஜ் பி.ஷெட்டி இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்தது. ஹிந்தியில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் இந்த படத்திற்கான ஓடிடி வியாபாரம் குறித்து தயாரிப்பாளர் ராஜ் பி ஷெட்டி கூறும்போது, “இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக எந்த ஓடிடி நிறுவனமும் இந்த படத்தை வாங்க முன்வரவில்லை. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் படம் நன்றாக ஓடுவதை பார்த்து ஒரு ஓடிடி நிறுவனம் மிகக்குறைந்த தொகைக்கு இதன் ஓடிடி உரிமையை கேட்டது.
ஆனால் அவர்கள் கேட்ட தொகைக்கு கொடுத்தால் கன்னட சினிமாவின் தரத்தை நாமே வேண்டுமென்றே குறைத்தது போல் ஆகிவிடும் என்று நான் நினைத்தேன். அதனால் எனக்கு தேவையான பணம் தியேட்டர்கள் மூலமே வந்து கொண்டிருக்கிறது என்று கூறி அவர்கள் பேசிய டீலுக்கு ஒப்புக்கொள்ள மறுத்தேன். அதன் பிறகு அவர்களாகவே முன்வந்து பேசியதை விட இரு மடங்கு தொகை அதிகம் தருவதாக கூறி இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கினார்கள். அதனால் உங்கள் படத்தின் மீது நம்பிக்கை இருந்தால் தியேட்டர்களில் அதை ஓடவிட்டு அதன்பிறகு அதன் ஓடிடி உரிமத்தை விலை பேசுங்கள்” என்று கூறியுள்ளார் ராஜ் பி.ஷெட்டி.