நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! |

இயக்குனர் விஜய் கதை எழுதி, தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்க சமுத்திரகனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா, ரீமா கல்லிங்கல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அப்பா - மகள் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஓடிடியில் டிச.,3ல் வெளியாகிறது.
பூஜா கண்ணன் சினிமாவில் அறிமுகமாகும் முதல்படம் இதுவாகும். அவர் கூறுகையில், ‛‛அம்மா மாதிரி சாய்பல்லவி என்னை பார்த்துக் கொள்வார். என் மீது அதிக அக்கறை காட்டுவார். ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசை இல்லை. அக்காவுடன் படப்பிடிப்பு, டப்பிங் சென்றபோது எனக்கும் அந்த ஆசை வந்தது. இதை வீட்டில் சொல்ல பயந்தேன். இயக்குனர் விஜய் தான் என் நடிப்பு ஆசையை கண்டுபிடித்து எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்று அக்கா விரும்பினார். கொடுக்கிற ரோலை சரியாக பண்ணு என்றார். ஒரே ஒரு நாள் அக்காவை டப்பிங் ஸ்டுடியோவுக்கு வரவைத்து நான் சரியாக பேசி இருக்கேனா என போட்டுக் காட்டினேன். நல்லா பண்ணிருக்க என்றார். படப்பிடிப்புக்கு நான் மட்டும் தான் போவேன். அம்மாவோ, அக்காவோ இருந்தால் பயம் வரும் என்றார்.