மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் | பிளாஷ்பேக்: சர்ச்சையில் சிக்கிய 'மனிதன்' | வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை | ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள் | புரமோஷனுக்காக டிரைவராக மாறிய இசையமைப்பாளர் தமன் | ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய்குமார், காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து நவம்பர் 5ல் வெளியான ஹிந்திப் படம் 'சூர்யவன்ஷி'. அஜய் தேவகன், ரன்வீர் சிங் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காரமணமாக மூடப்பட்ட தியேட்டர்களை மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு முன்புதான் தியேட்டர்களைத் திறந்தார்கள்.
அதற்கடுத்த இரண்டு வாரங்களில் வெளிவந்த 'சூர்யவன்ஷி' படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்தது பாலிவுட்டில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படம் இந்தியாவில் மட்டும 166 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பாலிவுட்டில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் முறையாக 100 கோடியைக் கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதுமான வசூல் 250 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.