அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கொரோனா இரண்டாவது அலைக்குப்பிறகு ஹிந்தியில் வெளியான படங்கள் எதுவும் வசூலிக்காத நிலையில், அக்சய்குமார் நடிப்பில் வெளியான சூர்யவன்ஷி படம் நவ., 5-ந்தேதி வெளியாகி இதுவரை ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். இவர் தமிழில் வெளியான சிங்கம் படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கனை வைத்தும், டெம்பர் தெலுங்கு படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்தும் ரீமேக் செய்தவர்.
அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இப்போது அக்சய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படத்தையும் ஹிட் படமாக கொடுத்துள்ளார். இந்தநிலையில், இந்த படம் திரையிட்டு ஒரு மாதமான நிலையில் நெட் பிளிக்ஸில் நிறுவனம் 70 முதல் 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.