சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் | முன்பதிவில் நல்ல வரவேற்பில் 'பாகுபலி தி எபிக்' | பிளாஷ்பேக்: தமிழில் டப் செய்யப்பட்ட கார்த்திக் படம் | பிளாஷ்பேக்: காத்தவராயனாக நடிக்க மறுத்த எம்ஜிஆர், நடித்து வெற்றி பெற்ற சிவாஜி | 'காந்தாரா சாப்டர் 1' நான்கு வார ஓடிடி வெளியீடு, ஏன்? | அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் ஆராத்யாவின் 10வது பிறந்தநாளை மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது எடுத்த சில போட்டோக்களை அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தை பற்றி சிலர் கிண்டலாக கமெண்ட் போட்டிருந்தார்கள். இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது: சினிமாவில் நான் பிரபலமாக இருப்பதால், என்னைப் பற்றி வரும் விமர்சனங்களை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள், தைரியம் இருந்தால் எனக்கு நேராக வந்து பேசட்டும். என்று கூறியுள்ளார்.
ஒரு தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்போது அபிஷேக் பச்சனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.