சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

அக்ஷய்குமார் நடித்த பெல்பாட்டம் படம் தியேட்டர்களில் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் அந்த படம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும் அக்ஷய்குமார் தனது படங்கள் தியேட்டரில்தான் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அக்ஷய்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் சூர்யவன்ஷி. இதில் அவருடன் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் நடித்துள்ளனர். ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாரான இந்தப் படம் ஊரடங்கு காரணமாக வெளிவரவில்லை. முழுமையாகத் திரையரங்குகள் திறப்பதற்குப் படக்குழு காத்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூர்யவன்ஷி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பிறகு பாலிவுட்டில் தியேட்டரில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் இதுவாகும். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள், பாலிவுட் சினிமாவின் நிலை சீராகும் என்கிறார்கள்.