மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், கத்ரினா கைப், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள பாலிவுட் படம் சூர்யவன்ஷி. ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோகித்தும் தயாரித்துள்ளார். முன்னணி நடிகர்கள் நடிக்க சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா தளர்வுகள் அமுலுக்கு வந்தாலும் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டருக்கு கூட்டம் வராத காரணத்தால், சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதோடு மூவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
ஏப்ரல் 30ம் தேதி சூர்யவன்ஷி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாவிட்டால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.