மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழ், தெலுங்கில் இப்பாடலை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
நேற்று மாலை 5 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 11 மணி அளவில் தான் நான்கு மொழிகளில் பாடல்களை வெளியிட்டார்கள். சில தொழில்நுட்பக் கோளாறே தாமதத்திற்குக் காரணம் என்றும் அறிவித்தார்கள்.
தமிழில் மதன் கார்க்கி எழுத, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிணி இவடுரி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். ஹரிணி நான்கு மொழிகளிலுமே பாடியிருக்க, யுவன் தமிழ், தெலுங்கில் மட்டும் பாடியிருக்கிறார்.
அனிமேஷன் டைப்பில் பாடலில் பிரபாஸ், பூஜா ஹெக்டே ஆகியோரை உருவாக்கியிருக்கிறார்கள். யுவனின் வழக்கமான வசீகரிக்கும் குரலில் ஒரு மெலடி பாடலாக இப்பாடல் இடம் பெற்றுள்ளது. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' பாடல்களுக்குப் போட்டியாக இந்தப் பாடல் யு டியூபில் என்ன சாதனை படைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.