பிளாஷ்பேக்: மகாத்மா காந்தி பார்த்த ஒரே சினிமா | பிளாஷ்பேக்: கவிஞருக்காக காட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் | 'ஸ்வீட்ஹார்ட்' படத்தால் 4 கோடி நஷ்டம்; வருத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜா | டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் | 'எல் 2 எம்புரான்' டிரைலர்களில் 'லைக்கா' பெயர் | ''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'ராதேஷ்யாம்' படம் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் வசூல் மிகக் குறைவாக இருப்பதாக ஆரம்ப கட்டத்திலேயே செய்திகள் வர தயாரிப்பு நிறுவனம் அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வசூல் விவரங்களை வெளியிட ஆரம்பித்தது. முதல் நாள் வசூல் 79 கோடி ரூபாய், இரண்டாவது நாளில் 119 கோடி ரூபாய் என்றும் அறிவித்தார்கள். நேற்றைய மூன்றாவது நாளையும் சேர்த்து வசூல் 150 கோடியைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல 2022ம் ஆண்டில் அதிகபட்சமான பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் இப்படி அறிவித்து வர, ஹிந்தியிலோ படம் படுதோல்வியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'சாஹோ' படம் 100 கோடி வசூலை ஹிந்தியில் தந்தது. ஆனால், இந்த 'ராதேஷ்யாம்' படம் 25 கோடியைக் கடந்தாலே ஆச்சரியம் என்றும் சொல்கிறார்கள்.
தமிழில் படத்திற்கு சுத்தமாக வரவேற்பே இல்லை என்பது அதிர்ச்சித் தகவல். இந்தப் படத்திற்காக இங்கு பத்திரிகையாளர் காட்சியைக் கூட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. நிலைமை இப்படியிருக்க இந்தப் படத்தை பான்--இந்தியா படம் என்று அழைப்பதே தவறு என கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்கள்.