மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான படம் 'ராதேஷ்யாம்'. பான்--இந்தியா ஸ்டார் என 'பாகுபலி' படங்களின் மூலம் பெயரெடுத்து பிரபாஸ், 'சாஹோ' படத்தின் மூலம் ஹிந்தியில் மட்டும் சாதித்தார். மற்ற மொழிகளில் அப்படம் பலமாக சறுக்கியது.
'ராதேஷ்யாம்' படத்தை சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியதாக தகவல் வெளியானது. 200 கோடி ரூபாய் அளவிற்கு தியேட்டர் வியாபாரம் நடைபெற்றது. ஹிந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், 25 கோடி வசூலைத் தாண்டுவதற்கே படம் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
ஒரு வாரம் முன்பு படத்தின் வசூல் 150 கோடியைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் எந்த வசூல் விவரத்தையும் வெளியிடவில்லை. கடந்த நான்கு நாட்களாக படம் பற்றி எதுவுமே பதிவிடவில்லை.
படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்றே டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இப்படத்தின் மூலம் நஷ்டம் வரும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வசூல் ஏற்படுத்திய பாதிப்பால் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் பான்--இந்தியா படங்களின் வியாபாரம் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு.