நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத். 3 படத்தின் மூலம் சிறுவயதிலேயே இசையமைப்பாளராக மாறிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் கமல் நடிக்கும் விக்ரம், விஜய் நடித்து வரும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு இசை கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனிருத், அடுத்ததாக ரஜினி மற்றும் அஜித் படங்களுக்கு இசையமைக்கும் முன்கட்ட வேலைகளையும் துவங்கியுள்ளார்.
இளையராஜா பிஸியாக இருந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஒரே சமயத்தில் இசையமைத்து வந்தார். இளையராஜாவுக்கு அடுத்ததாக இசையில் பேசப்படுகின்ற ஏ.ஆர்.ரகுமான் ஒரே நேரத்தில் ஒரு படத்துக்கு மட்டுமே இசை அமைப்பதில் கவனம் செலுத்தினார் என்பதால் இளையராஜாவை போன்று ஒரே சமயத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவில்லை. அதேசமயம் அனிருத் தற்போது ரஜினி, கமல் மற்றும் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த தலைமுறை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருவது சாத்தியமாகி உள்ளது.