ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழை விட தெலுங்கில் தான் அதிக ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமந்தா நடித்த தெலுங்குப் படங்களில் முக்கிய படமான 'ரங்கஸ்தலம்' படத்தை இயக்கிய சுகுமார் அடுத்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார் சமந்தா. இயக்குனர் சுகுமார் கேட்டுக் கொண்டதற்காக இப்படி நடனமாட சம்மதித்துள்ளாராளம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அல்லு அர்ஜுனுடன் இணைந்து அந்தப் பாடலில் சமந்தா நடிக்கப் போகிறாராம். சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுதான் முதல் முறையாம். அதனால், இந்தப் பாடலை மிகவும் ஸ்பெஷலாகப் படமாக்க உள்ளார்களாம்.
இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு சம்பளமாக ஒன்றரை கோடி கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு நடிகைக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பளங்களிலேயே இதுதான் அதிகம் என்கிறார்கள்.