ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கு திரையுலகின் சீனியர் ஹீரோவான பாலகிருஷ்ணா தற்போது போயப்பட்டி சீனு டைரக்ஷனில் அகண்டா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இதை தொடர்ந்து கோபிசந்த் மாலினி டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்திற்காக முதலில் ரவுடியிசம் என்கிற தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தாராம் இயக்குனர். அதே சமயம் பாலகிருஷ்ணாவுக்கு தனது தந்தை பெயரான ராமாராவ் என்கிற பெயரிலேயே டைட்டில் வைக்கலாம் என்கிற ஆசை இருந்ததாம்.
ஆனால் அந்த சமயத்தில் தான் ரவிதேஜா நடிக்கும் படத்திற்கு ராமாராவ் ஆன் டூட்டி என டைட்டில் வைக்கப்பட்டு விட்டது. இதனால் தனது படத்திற்கு தந்தை பெயரை வைக்க முடியாத நிலையில், தனது பெயரே டைட்டிலில் வரும் விதமாக என்பிகே என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளாராம் பாலகிருஷ்ணா. கிட்டத்தட்ட சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படம் போலவே இந்த மூன்றெழுத்து டைட்டிலும் இருக்கிறது. இனி படம் துவங்கி வெளியாவதற்குள் வேறு என்னென்ன டைட்டில்கள் பரிசீலனைக்கு வந்து செல்ல போகின்றனவோ பாலகிருஷ்ணாவுக்கே வெளிச்சம்.