
கிரீன் இந்தியா சேலஞ்ச் : அதிதி சவாலை நிறைவேற்றிய துல்கர்
அந்தவகையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான், தான் நடித்து பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ள குருப் என்கிற படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அவர் தனது இன்னொரு படமான ஹே ஷினாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி விடுத்துள்ள மரம் நடும் சவாலை ஏற்று அங்கே மரக்கன்றுகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச் பிரச்சாரத்தை ரசிகர்களிடம் மீண்டும் துவக்கியுள்ளார்.
எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய குருப் என்கிற கொலைகாரனை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!