இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
நடிகை அதிதி ராவ் ஹைதாரியும், சித்தார்த்தும் தீவிரமாக காதலித்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஒரே காரில் ஜோடியாக வந்து இறங்கினார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக விளக்கம் அளிக்கும் சித்தார்த், அதிதியுடனாக காதல் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிதிக்கு பிறந்த நாள். இதை தொடர்ந்து அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு, "என் இதய இளவரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் கனவுகள், பெரியவை, சிறியவை, இன்னும் காணாதவை அனைத்தும் நனவாகட்டும், எப்போதும் உங்களுக்காக. சூரியனைச் சுற்றிய சிறந்த பயணம் இருக்கும்” என்று காதலில் உருகி உள்ளார் சித்தார்த்.