பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் சமீபத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதன் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. அதேசமயம் இந்தப்படத்தின் ஒரிஜினலான ஹிந்தியில் கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தான் நழுவ விட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தற்போது கூறியுள்ளார்.
ஹிந்தியில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துவிட்ட துல்கர் சல்மானுக்கு அந்தாதுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்த சமயத்தில் சரியான தகவல் தொடர்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படாததால் அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து கைநழுவிப் போனது என தற்போது ஒரு பேட்டியில் துல்கர் சல்மான் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி உள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபோதுதான் துல்கர் சல்மான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.




