'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
துல்கர் சல்மான் நடித்து நேற்று வெளியான படம் குரூப். இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். இந்த படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் முடிந்த பிறகு சுகுமார குரூப்பின் குடும்பத்திற்கு போட்டுக்காட்டி அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் சுகுமார குரூப்பின் தனியுரிமையை பாதிக்கிறது, அவரது குடும்பத்தினர் இந்த படத்தை விரும்பவில்லை எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது, என்றாலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் இண்டர்போலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.