50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி |
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.
2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்-க்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், டில்லியில் நாளை (அக்டோபர் 25) நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த்-க்கு விருது வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‛எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது. இரண்டாவது, என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்.
அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ‛HOOTE APP மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்த ரஜினிகாந்த், ‛தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் எனது குரு கே.பாலசந்தர் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை,' எனப் பேசினார்.