ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‛வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு, தமது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வாகா எல்லையில், ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தை புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் அஜித் மேற்கொள்ளும் உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அடுத்து தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.