பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
"வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரியான பிந்துமாதவி, "கழுகு படத்திற்கு பின், பிசியான நடிகையாகி விட்டார். "சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இருவர் உள்ளம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில், "சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இடம்பெற்ற, ஒரு பாடல் காட்சி ஹாங்காங்கில் படமானபோது, ஹெலிகாப்டரில் இருந்து தவறிவிழுந்து காயமடைந்த பிந்துமாதவி, "கேடி பில்லா கில்லாடி ரங்கா படப்பிடிப்பை முடித்து விட்டு, திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் வந்தபோதும் விபத்தில் காயமடைந்தார். இருப்பினும், இந்த பிரச்னையினால் படப்பிடிப்பை தள்ளி போடாமல், நடித்து கொடுத்து இயக்குனர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். "என் நேரம் நன்றாக இருந்ததால், இந்த விபத்துகளில் இருந்து தப்பினேன் என்று சொல்லும் அவர், "என்னதான் திறமை இருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் அதிர்ஷ்டம் கண்டிப்பாக வேண்டும் என்கிறார்.