போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
தீபாவளித் திருநாள் என்றாலே புதிய படங்களை வெளியிட ஒரு கொண்டாட்டமான நாளாக இருக்கும். அன்றைய தினத்தில் தங்களது படங்கள் வெளிவர வேண்டுமென அனைத்து நடிகர்களும் நினைப்பார்கள். மற்ற எந்த பண்டிகை நாளையும் விட தீபாவளிக்கு அப்படி ஒரு சிறப்பு.
கடந்த வருடம் முதல் ஓடிடி தளங்களிலும் தீபாவளிக்குப் போட்டி ஆரம்பமானது. அப்போது சூர்யா நடித்த 'சூரரைப் போற்று', நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த வருட தீபாவளிக்கும் ஓடிடி தளத்தில் கடும் போட்டி நிலவ உள்ளது. இந்த வருட தீபாவளிக்கும் சூர்யா நடிக்கும் படம் வெளிவருகிறது. 'ஜெய் பீம்' படத்தை நவம்பர் 2ம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். அடுத்து சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' படத்தையும் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இவை தவிர மேலும், சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
தீபாவளிக்கு தியேட்டர்களில் 'அண்ணாத்த, எனிமி' மட்டுமே வெளியாக உள்ள நிலையில் ஓடிடி தளங்களில் அவற்றை விட அதிகமான படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.