சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு |

தமிழ் சினிமாவில் சில படங்களும், சில கதாபாத்திரங்களும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 'ஜெய் பீம்' படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரமாக 'ராஜகண்ணு' கதாபாத்திரத்தில் நடித்தவர் மணிகண்டன். அவர்தான் போலீஸ் கஸ்டடியில் இறந்து போவார். அது தெரியாத லிஜோ மோள் ஜோஸ் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென நீதிமன்றம் செல்வார். அந்தப் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமாக நடித்து நம்மை கண் கலங்க வைத்தவர் மணிகண்டன்.
அப்படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'குட் நைட்' படத்தில் நம்மை மீண்டும் ஒரு முறை காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நெகிழ வைத்திருக்கிறார். 'மோகன்' என்ற கதாபாத்திரம், அலுவலக நண்பர்களுக்கு 'மோட்டார் மோகன்', காரணம் தூக்கத்தில் அவர் விடும் குறட்டை சத்தத்திற்காக அந்த பட்டப் பெயர். மோகன் கதாபாத்திரத்திலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து அவரைப் பாராட்டி வருகிறார்கள். படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்திற்கான தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்திருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு 'கலக்கப் போவது யாரு' டிவி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டவர். அடுத்து 'பீட்சா 2' படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் நுழைந்து நடிகராகவும் மாறி, கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். 'விக்ரம் வேதா' படத்திற்கும் வசனம் எழுதியவர் மணிகண்டன். 'விஸ்வாசம்' படத்திற்கு வசனம் எழுதியவர்களில் ஒருவர்.