நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரே கதையைக் காப்பியடித்த (?) சில தமிழ்ப் படங்கள் ஒரே சமயத்தில் வெளியான வரலாறும் இருக்கிறது. பிரசாந்த், சிம்ரன் நடித்த 'ஜோடி', சூர்யா, ஜோதிகா நடித்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்', ஆகிய இரண்டு படங்களின் கதையும் ஒரே கதைதான். ஒரே ஹாலிவுட் படத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்ட படங்களும் இருக்கிறது.
அந்த விதத்தில் அடுத்த 'காப்பி' படமாக அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 'டியர்' படம் இருக்கப் போகிறது. இந்தப் படத்தில் கொஞ்சம் 'மாத்தி யோசி' என யோசித்திருக்கிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த 'குட்நைட்' படத்தின் கதையும், இந்த 'டியர்' படத்தின் கதையும் ஒன்றுதான். அதில் குறட்டை விடும் கதாநாயகன், இதில் குறட்டை விடும் கதாநாயகி என்பதுதான் வித்தியாசம்.
நேற்று வெளியான டிரைலரின் யு டியுப் பக்கத்தில் இதே போன்று பல கமெண்ட்டுகள் உள்ளன. கடந்த வருடத்தின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மணிகண்டன், மீதா ரகுநாத் நடித்த 'குட்நைட்' படம் அமைந்தது. அது போல 'டியர்' படமும் வெற்றிப் படமாக அமையுமா என்பதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.