தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் |
ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி அதை சுற்றி கதை களம் அமைத்து அவ்வப்போது படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமான படம் 'கண்காட்சி'. 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அப்போது தென்சென்னை மற்றும் வடசென்னையில் நடந்த இரண்டு கண்காட்சிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 'கண்காட்சி' என்ற பெயரிலேயே வெளியானது.
இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கி இருந்தார். சிவகுமார், குமாரி பத்மினி, மனோரமா, சிஐடி சகுந்தலா, கள்ளபார்ட் நடராஜன், சுருளிராஜன் நடித்திருந்தார்கள். சிவகுமார்-குமாரி பத்மினி ஒரு ஜோடியாகவும், கள்ளபார்ட் நடராஜன்--ஏ.சகுந்தலா ஒரு ஜோடியாகவும், சுருளிராஜன்-மனோரமா மற்றொரு ஜோடியாகவும் நடித்த்திருந்தனர். மற்றும் கே.டி.சந்தானம், ரி.என்.சிவதாணு, வி.கோபாலகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபு, மாஸ்டர் தசரதன், ஏ.கே.வீராச்சாமி, பேபி ராணி, ஹெரான் ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தார்கள். பீட்டர் என்ற நாய் ஒன்றும் நடித்துள்ளது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படமும் வெற்றி பெற்றது.