நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுசீந்திரனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய விருது வென்ற படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான படம். இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கருவறை என்ற குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வரிசையில் ஜெய்பீம் படம் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.