விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

கடந்த இரண்டு வருடங்களுக்குள் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகராக மாறியுள்ளளார் விஜய் தேவரகொண்டா. இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் கூட இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் சிவா நிர்வானா என்பவர் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா ஒரு படம் நடிப்பதாக ஒப்பந்தமானது, ஆனால் இந்த படம் மேற்கொண்டு வளராமல் அப்படியே நின்றது.
கொரோனா தாக்கம் காரணமாக தான் படம் துவங்குவதற்கு தாமதம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென இந்த படத்தை விஜய் தேவரகொண்டா அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விசாரித்தால் விஜய் தேவரகொண்டாவின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த படத்தை அப்படியே அவர் கிடப்பில் போட்டு விட்டாராம். அவருக்கு பதிலடி தரும் விதமாக தான் விஜய் தேவரகொண்டா அதே கதையை அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் நடிக்க தயாராகிவிட்டாராம்.