சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு |

மலையாள திரையுலகின் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ். தமிழில் அஜித்தின் ஜனா, விஜயகாந்தின் வாஞ்சிநாதன் மற்றும் நடிகர் ஆர்.கேவை வைத்து எல்லாம் அவன் செயல் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இடையில் கடந்த சில வருடங்களாக கொஞ்சம் தேக்கம் ஏற்பட, தற்போது மீண்டும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் சுரேஷ்கோபி நடிப்பில் கடுவா என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
இந்தப்படம் ரிலீசாவதற்கு முன்பாகவே மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஷாஜி கைலாஷ்.. இதற்கான அறிவிப்பை இன்று தானே வெளியிட்டுள்ள மோகன்லால், “பனிரெண்டு வருடங்கள் கழித்து நாங்கள் மீண்டும் இணைகிறோம்... நீண்ட நாள் காத்திருப்பு நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை வீணாக்காது, வரும் அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது” என கூறியுள்ளார்.
கடந்த 2009ல் இவர்கள் கூட்டணியில் கடைசியாக ரெட் சில்லிஸ் என்கிற படம் வெளியானது. அதற்கு முன்னதாக பாபா கல்யாணி, நாட்டுராஜாவு, ஆறாம் தம்புரான் என மோகன்லாலுக்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.