அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா | விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் |
துபாய் அமீரகம் இந்தியாவில் உள்ள செலிபிரிட்டிகளுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் 10 ஆண்டுகள் வரை துபாயை சொந்த நாடு போன்று பாவிக்கலாம். அங்கேயே தங்கி இருக்கலாம், தொழில் செய்யலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த கோல்டன் விசா முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு சல்மான்கான், ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் வளரும் இளம் நடிகர் டொவினோ தாமசுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டோவினோ தாமஸ் கூறியிருப்பதாவது: இந்த கவுரவத்தை பெறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. துபாய் எனது இரண்டாவது தாய் நாடாகும். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த விசாவின் சலுகைகள் இணையில்லாதது. என்றார்.
டொவினோ தாமஸ் கடந்த 8 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். பிரபுவின்ட மக்கள் படத்தில் அறிமுகமான அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஏபிசிடி, கூதரா, சார்லி, என்ட நின்னு மொய்தீன், 2 பெண்குட்டிகள், மாயநதி, லூசிபர், வைரஸ், பாரன்சிக், கள போன்றவை அவர் நடித்த முக்கிய படங்கள். தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார்.