ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் | மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய் | ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு என கூறி பணம் பறிக்க முயற்சி : நடிகை எச்சரிக்கை |
1970 மற்றும் 1980 காலகட்டங்களில் ஏராளமான படங்களை இயக்கியவர் கே.பி.பிள்ளை. அஷ்டமுடி கயல், பிருந்தாவனம், நகரம் சாகரம், பாதிரா சூரியன், பிரியசகி, பணிதீரா வீடு உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர். 91 வயதான அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக பல உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்த்தினார்கள். பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய ராணுவத்தின் விமானப் படையில் 21 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கலைத்துறைக்கு வந்தவர் கே.பி.பிள்ளை. ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தும், நாடகத்தை இயக்கியும் வந்தார். பிறகு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுடன் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி விட்டு சாகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாள சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கினார்.