'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவருக்கு முதல் படமாக வெளியான இந்தப்படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் கயாடு லோஹர். அதற்கு சமகாலத்திலேயே அதர்வாவுடன் ஜோடியாக அவர் நடித்து வந்த 'இதயம் முரளி' திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. 'டிராகன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கயாடு லோஹருக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'பள்ளிச்சட்டம்பி' என்கிற படத்தில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோஹர், ஏற்கனவே மலையாளத்தில் '19ம் நூற்றாண்டு', 'ஒரு ஜாதி ஜாதகம்' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் போலி என்கவுண்டர் கதை அம்சத்துடன் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய 'ஜன கன மன' படத்தை இயக்கிய இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தான் பள்ளிச்சட்டம்பி படத்தை இயக்குகிறார்.