எம்புரான், பஷூக்கா : தொடர்ந்து ஆக்ஷன் மோடுக்கு தயாராகும் மலையாளம் | இன்ஸ்டா பிரபலத்தை பிரபாஸின் ஜோடியாக்கியது ஏன்? : இயக்குனர் விளக்கம் | மீண்டும் ஒரு புரமோஷன் சர்ச்சை : இந்த முறை பெண் இயக்குனருக்கும் நடிகைக்கும் | பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது | அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப் போவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஆனால் சில காரணங்களால் பாட்டு படத்தை தள்ளிவைத்து விட்ட அல்போன்ஸ் புத்ரன், பிரித்விராஜூக்காக தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்லி, அவரிடம் சம்மதம் பெற்று அந்தப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தும் விட்டார். கதையும் ஹீரோவும் மாறினாலும் நாயகி என்னவோ நயன்தாரா தான்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு கோல்டு என டைட்டில் வைத்துள்ளாராம் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிவரும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இந்தப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறாராம்.