அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா | விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் |
மலையாள திரையுலகின் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் நடிகர் சுரேஷ்கோபி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஏற்றுமானூர் பகுதியை சேர்ந்த அஸ்வதி அசோக் என்கிற ஏழைப் பெண் ஒருவருக்கு திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாகவும் அளித்துள்ளார் சுரேஷ்கோபி.
இருபது வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த அஸ்வதிக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சமயத்தில் தான் கொரோனா தாக்கம் காரணமாக திருமணத்தை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வரும் செப்-9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் சிலர் மூலமாக சுரேஷ்கோபிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து, ஏற்றுமானூர் மகாதேவன் கோவிலில் முன்பாக வைத்து, திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. அவரது இந்த செயல் சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.