காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஒரு காலத்தில் சிரஞ்சீவி படம் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் எல்லாம் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி சிரஞ்சீவி தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தை ரிலீஸ் செய்வதற்கு உரிய தேதி கிடைக்காமல் தவித்து வருகிறார்.
கொராட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மைதான். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நீடித்து வருகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை.
தற்போது இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா, சர்க்கார் வாரி பாட்டா உள்ளிட்ட படங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ் பொங்கல் என முக்கியமான பண்டிகை தேதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. குறிப்பாக, சங்கராந்தி பண்டிகையில் தனது படத்தை வெளியிடலாம் என நினைத்திருந்தார் சிரஞ்சீவி ஆனால் அந்த தேதியில் மட்டும் தற்போதைய நிலைமையில் 4 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கின்றன
இந்த போட்டியின் காரணமாக இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டு படங்கள் கூட விலகுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். இதனால் பொங்கலுக்கு பிறகு தான் தங்கள் படத்தை வெளியிட்டாக வேண்டுமோ என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆச்சார்யா படக்குழு.




